'அரபிக் குத்து' சாதனையை முறியடிக்காத 'ரஞ்சிதமே'

ஆசிரியர் - Editor II
'அரபிக் குத்து' சாதனையை முறியடிக்காத 'ரஞ்சிதமே'

தளபதியின் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக அண்மையில் வெளிவந்த 'ரஞ்சிதமே' பாடல் 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும் 1.3 மில்லியன் லைக்குகளை மட்டுமே பெற்றது.

இதற்கு முன்பு இந்த ஆண்டில் வெளிவந்த 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக் குத்து' பாடல் 24 மணி நேரத்தில் 23.7 மில்லியன் பார்வைகளையும், 2.2 மில்லியன் லைக்குகளையும் பெற்று அப்போது புதிய சாதனையைப் படைத்தது. அந்த சாதனையை 'ரஞ்சிதமே' பாடலால் முறியடிக்க முடியவில்லை.

தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை. எனவே, இந்த 'ரஞ்சிதமே' புதிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்த்த படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றமே. 

இருந்தாலும் தற்போது 25 மில்லியன் பார்வைகளைக் கடந்து, யு டியூபில் இன்னமும் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது இந்தப் பாடல். அடுத்து வெளிவர உள்ள பாடல்கள் புதிய சாதனையைப் படைக்கும் என்ற நம்பிக்கையுடன் தளபதி விஜய் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு