யாழ்.மாவட்ட மக்களுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!!
யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், பொதுமக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுவ தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மாவட்டத்தில் இன்றுவரையான காலபகுதியில் 2774 வரையானோர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றுவரை இந்த இந்த வருடத்தில் 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளது.
ஆகவே நாங்கள் பொது மக்களை கேட்டுக்கொள்வது யாதெனில் கட்டுப்படுத்தி எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்டு நிற்கின்றோம்.
2020 ஆம் ஆண்டிலே 2530 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு ஆண்டில் 2021 ஆம் ஆண்டிலே 301 நோயாளர்களும் இணங்காணப்பட்டிருந்தார்கள்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து மாதரீதியாக பார்க்கின்ற பொழுது ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து மே ஜூன் மாதமளவில் ஒரு அதிகரித்த பரம்பல் காணப்பட்டது.
பின்பு குறைவான நிலை காணப்பட்டு கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் மீண்டும் டெங்கு நுளம்பானது அதிகரித்து செல்வதை நாங்கள் அவதானிக்க கூடியதாக உள்ளது.