SuperTopAds

நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்க முயற்சித்த நபர்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்க முயற்சித்த நபர்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..

நீதிமன்றில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதான நபர் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

மேற்படி சம்பவம் நுவரெலியா நீதவான் நேற்று (02) இந்த உத்தரவை பிறப்பித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தில் அமைதியாக இருக்குமாறு அங்கிருந்த மக்களுக்கு அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அப்போது நீதிமன்றத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் திறந்த நீதிமன்றத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

அங்கு, ஒருவரை அழைத்து, அவர் வந்த நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்தால், அமைதியாக இருக்கும்படியும், 

இல்லையென்றால் குறித்த இடத்தை விட்டு வெளியேறும்படியும் அறிவுறுத்தினர்.அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர், சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை திட்டி தாக்கியதுடன், 

அந்த அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் 

குறித்த நபரை கைது செய்து நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.