தன்னை கடித்த நாகபாம்பை கடித்து குதறிய சிறுவன்

ஆசிரியர் - Editor II
தன்னை கடித்த நாகபாம்பை கடித்து குதறிய சிறுவன்

ஜாஸ்பூர் மாவட்டம் சத்தீஸ்கர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தீண்டிய நாகப்பாம்பை அந்த சிறுவனே கடித்து கொன்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில் பாஹ்டி கோர்வா என்ற பழங்குடியின கிராமம் உள்ளது.

இப்பகுதியில் 200 வகையான பாம்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 12 வயதான சிறுவன் தீபக்ராம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கே விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று தீபக்ராம் கையை கடித்துள்ளது.

கடித்த பாம்பு விடாமல் கையை சுற்றியதால் ஆவேசம் அடைந்த சிறுவன் அந்த பாம்பை பலமுறை திரும்ப கடித்தான். இதில் அந்த பாம்பு உயிரிழந்தது. இதற்கிடையே சிறுவனின் சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் சிறுவனை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு