கட்டுப்பாடற்ற வேகத்தால் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! 10 பேர் காயம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகத்தால் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! 10 பேர் காயம்..

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் நாவலப்பட்டி - மீபிடிய பகுதியில் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. 

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன.

விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான 10 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக வேகமே விபத்திற்கான காரணம் என தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு