யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோயினுக்கு அடிமை! உயர்மட்ட கலந்துரையாடலில் சுட்டிக்காட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோயினுக்கு அடிமை! உயர்மட்ட கலந்துரையாடலில் சுட்டிக்காட்டு..

யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோயின் பொதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகயுள்ளதாக ஆளுநர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்ற போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பிலான சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 9 ஆயிரத்து 900 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகின் மிக மிக ஆபத்தான உயிர்கொல்லி கொக்கெய்ன் போதைப்பொருள் பாவனையாளராக ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மாணவர்களை இலக்கு வைத்தே போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள கலட்டி சந்திக்கு அண்மையாக அமைத்துள்ள மாணவர் விடுதி ஒன்றில் யாழ்.பல்கலைக்கழக கல்லூரி மாணவர், 

கொழும்பு பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட மூவர் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களுக்கு போதைப்பொருளை விநியோகித்த 

ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு