7 மாதங்களாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை!!

ஆசிரியர் - Editor II
7 மாதங்களாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை!!

புதுடில்லியில் கடந்த ஏழு மாதங்களாக 'கோமா' நிலையில் இருந்த உத்தர பிரதேச பெண்ணுக்கு, புதுடில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் பெண் குழந்தை பிறந்தது.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷரைச் சேர்ந்த ஷாபியா, (வயது 23) என்ற பெண், கடந்த ஏப்ரலில் நடந்த விபத்தில் காயமடைந்தார். தலையில் காயம் ஏற்பட்டதால், கோமா நிலைக்கு சென்றார்.

இதையடுத்து, அவர் புதுடில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடந்த போது, அவர் 40 நாள் கர்ப்பிணியாக இருந்தார்.

கரு நல்ல ஆரோக்கியமாக இருந்ததால், கருவைக் கலைப்பது குறித்து குடும்பத்தாருடன் வைத்தியர்கள் ஆலோசித்தனர். கர்ப்பத்தை தொடர குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கிடையே, அந்தப் பெண்ணுக்கு, 4 முறை நரம்பியல் அறுவை சிகிச்சைகள் நடந்தன.

இந்நிலையில், கடந்த வாரம் 'நார்மல் டெலிவரி'யில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போதும் அவர் கோமா நிலையிலேயே இருந்தார். கோமா நிலையில் இருந்தபோதும், சுகப்பிரசவம் நடந்துள்ளது அபூர்வமானது என்று வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு