SuperTopAds

உறுதியானதா சித்தார்த் - அதிதி ராவ் காதல்!!

ஆசிரியர் - Editor II
உறுதியானதா சித்தார்த் - அதிதி ராவ் காதல்!!

சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதல் செய்து வருவதாக கிசுகிசு பரவி வந்த நிலையில் தற்போது சித்தார்த்தின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.

அண்மைக்காலமாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். 

இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையில், அதிதிராவ் பிறந்த நாளையொட்டி அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், 'இதய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டு உள்ளார். அதோடு தனது நெஞ்சில் அதிதிராவ் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் இருவரின் காதல் உறுதியானதாக பதிவிட்டு வருகின்றனர்.