குழந்தை பெற்ற பின் நமீதா எடுத்துள்ள திடீர் முடிவு!!
வருங்காலங்களில் முடுவதிலும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகையும் பா.ஜ.க.வில் உறுப்பினருமான நமீதா தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை மணந்து கொண்டார். இவருக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில், இவர் தனது கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நமீதா:- தன் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டி கோவிலுக்கு வந்ததாகவும் வருங்காலங்களில் முழுமையாக அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார். இவர் பா.ஜ.க.வில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.