SuperTopAds

பலாலி - சென்னை விமான சேவை அரசால் மீள ஆரம்பிக்கப்போவது எப்போது?

ஆசிரியர் - Admin
பலாலி - சென்னை விமான சேவை அரசால் மீள ஆரம்பிக்கப்போவது எப்போது?

பலாலியில் இருந்து சென்னைக்கான நேரடி விமான சேவையினை ஆரம்பிக்க எடுத்த முயற்சின் தற்போதைய முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார் என்பதே வடக்கு மாகாண மக்களின் மனங்களில் உள்ள அபிவிருத்தி சார் கேள்விகளில் முக்கிய கேள்வியாக உள்ளது.

ஏனெனில் பலாலி விமானத் தளத்தினை சிவில்போக்கு வரத்து விமான நிலையமாக மாற்றி அதனை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக பலராலும் முன்வைக்கப்பட்ட ஓர் திட்டமாகும். இருப்பினும் இதற்கு சிலரின் எதிர்ப்பும் முன்னர் இருந்த்து. இந்த நிலையிலேயே 2015ம் ஆண்டு குறித்த திட்டத்தினை இந்திய அரசு கையில் எடுத்தது. அப்போது ஆட்சியில் இருந்த அரசு நேரடியாகவே சீனா சார் கொள்கையில் இருந்தமையினால் அதனை எதிர்த்தது . இருப்பினும் அம் முயற்சி தொடர்ந்தது.

இதன் பின்பு ரடில் மைத்திரி கூட்டாட்சி ஏற்பட்ட நிலையில் குறித்த பணி சற்று வேகம்கொண்டது. இதன்விளைவாக 2016ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை விமான நிலையப் பணிப்பாளர் தீபக் சாஸ்திரி தலமையிலான 7 பேர்கொண்ட இந்திய அதிகாரிகள் குழு பலாலி விமான நிலையத்தை நேரில் வந்து பார்வையிட்டு பலாலி சென்னை விமான சேவையை ஆரம்பிக்ககூடிய வாய்ப்புக்கள் தொடர்பில் ஒரு நாள் ஆய்வில் ஈடுபட்டனர். இதன்போது ஓடு பாதை போதுமானதா , மேலும் அமைக்க வேண்டிய வாய்ப்புக்கள் என்ன ? .என்பவை தொடர்பில் ஆராய்ந்த்தோடு மேலதிக நிலம் தேவைப்படுமா ? எனவும் அதிக கவனத்துடன் ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின்போது விமான ஓடுதளம் , கட்டுப்பாட்டு அறை , பயணிகள் தங்குமிடம் , சோதணைக்கூடம் , சுங்க அதிகாரிகள் பிரிவு , களஞ்சிய வசதி , சிவில் பாதுகாப்பு பிரிவு , அவசர உதவிப் பிரிவு , என்பன தொடர்பில் தனித்தனியே கவனம் செலுத்தியிருந்தனர். இதன்போது குழுவிற்குத் தலமை தாங்கிய அதிகாரி இத்துனையில் நீண்ட அனுபவத்தினை கொண்டவராகவும் கானப்பட்டார். அவரின் இறுதி அறிக்கையின் பிரகாரம் தற்போதைய விமான நிலையத்தை முழுமையான சிவில்போக்குவரத்து விமான சேவைக்குரிய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய அத்தனை வாய்ப்புக்களையும் ஏற்படுத்த போதிய இடவசதி பலாலி விமான நிலையத்தின் உட் பகுதியில் தற்போதுள்ள நிலமே போதுமானது எனவும் விமான சேவைக்கான ஓடு பாதையும் நீட்டிக்க வேண்டிய அவசியம் கிடையாது . எனப் பதிலளித்திருந்தார்.

இதன் அடுத்த படியாக இந்தியா திரும்பிய குழுவினர் தாம் திரட்டிய தரவுகள் மற்றும் விபரங்கள் அளவீடுகளின் அடிப்படையில் இந்தியாவில் ஓர் மாதிரி விமான நிலையத்தினையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதாவது வரைபடைத்தை ஒத்த நிகழ்வில. ஈடுபட செலவு மதிப்பீடு செய்யப்பட்டது. ஏனெனில் குறித்த பணிக்கான பணத்தினை இந்திய அரசே செலவு செய்ய சம்மதம் தெரிவித்திருந்தது. இதனால் கட்டிடம் மற்றும் அமைப்புகளிற்கும் அப்பால் மாதிரி உரு தயாரிப்பதற்கான செலவு மட்டும் இந்திய ரூபாவில் ஒரு கோடி ரூபா வேண்டும் என மதிப்பிடப்பட்டது.

இந்தக் காலத்திலேயே வலி. வடக்கில் படையினர் மக்களின் வாழ் விடங்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரித்து வைத்திருந்தனர். இதனால் அவ்வாறு அபகரித்து வைத்திருக்கும் மக்களின் நிலத்தையும் இந்த விமான நிலைய அபிவிருத்திக்குள் விழுங்கி விடுவார்களோ என்ற அச்சம் எழுப்பினர். இதனால் வடக்கு மாகாண முதலமைச்சரும் பலாலி சென்னை விமான சேவை என்ற விடயம் தொடர்பில் தளம்பல் நிலையில் கானப்பட்டார். இதனால் குறித்த பணி கிடப்பில் கானப்பட்டது. தற்போது வலி. வடக்கில் இருந்து மேலும் 3 ஆயிரம் வரையிலான நிலம் விடுவிக்கம்பட்டு தற்போது 4 ஆயிரம் ஏக்கர் நிலமே படைவசம் உள்ளது எனக் கண்டறியப்பட்ட நிலையில் அரசிடம் இரு விடயம் தொடர்பிலும் கோரிக்கை வைக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு கானப்படுகின்றது.

விமான நிலையத்திற்கு மேலதிக நிலம் தேவையில்லை பணம் செலவு செய்து விமான சேவையை நடாத்த இந்தியா தயார் என்ற நிலையில் குறித்த விடயத்திற்கான அனுமதியை வழங்க இலங்கை அரசு மறுக்கின்றது. அவ்வாறு அனுமதியை மறுக்கும் ரணில் அரசு கூறும் காரணம் பலாலி சென்னை விமான சேஙையை ஆரம்பித்தாலும் அதற்கு செலவு செய்யும் பணத்தின் பெறுமதிக்கேற்ற கோரலோ அல்லது தேவைப்பாடோ ஏற்படாது . என்ற புதிய காரணத்தை கூறுகின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறிய கூற்றுத் தொடர்பில் ஆராய்ந்தபோது மிகப்பெரும் அதிர்ச்சிகரமாண புள்ளி விபரத் தகவல்களுடன் அது தவறான கூற்று எனவும் தெரிய வருகின்றது. அதாவது தற்போது வடக்கில் இருந்து பல ஆயிரம் ரூபா செலவு செய்து 10 மணித்தியால பயணம் செய்து செல்ல வேண்டிய இந்தியாவிற்கு 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டில் 38 ஆயிரம் பேரும் 2017ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டிய எண்ணிக்கையிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் மூலம் இந்தியா செல்வதற்கான வீசா அனுமதியினைப் பெற்றுள்ளனர்.

இவ்வளவு பண விரயம் , நேர விரயம் , அச்சத்துடனேயே ஆண்டிற்கு 40 ஆயிரம்பேர் வடக்கு மாகாணத்தில் இருந்து இந்தியா செல்லும் நிலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு இரு மணி நேரத்தில் தமிழ் நாட்டில் இருக்க முடியும் என்றால் தினமும் எத்தனை நூற்றுக் கணக்கானோர் இந்தியாவிற்குச் சென்று வருவர்.

அதேநேரம் சென்னை விமான நிலையப் பணிப்பாளர் தெரிவித்ந கூற்றான குறித்த ஓடுபாதையில் பயணிகள் விமானம் இறக்குவதற்கு ஓடுபாதை போதிமானது என்பதனை நிருபிப்பதற்கும் இரு உதாரணங்களும் உண்டு அதாவது இந்தியப் பிரதமர் மோடி பயணித்த 140 பயணிகள் பயணிக்கத்தக்க விமானமும் அமெரிக்க மருத்துவக் குழுவினரும் வடக்கு மாகாண முதலமைச்சர் , அமெரிக்கத் தூதுவர் , அமைச்சர் மனோ கணேசண் ஆகியோர் பயணித்த பாரிய விமானமும் இதே பலாலியில் உள்ள தற்போதுள்ள ஓடுபாதையில் தரையிறங்கின. இதில் அமெரிக்க விமானம் தரை இறங்கும்போது அருகில் இருந்து கண்ணால் கண்டேன்.

இவ்வாறான சூழலில் 28 வருடம் இராணுவப் பிடியில் இருந்து மீண்ட வலி. வடக்கு மக்கள் மட்டுமன்றி வடக்கு மாகாண மக கள் அனைவரினதும் பெரும் வாய்ப்பாக குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்ந வேண்டும் . என்ற ஏக்கத்தினை வெளிப்படுத்துகின்றனர். இதனால் குறித்த விடயம் தற்போது மீண்டும் கோரிக்கையாக எழுகின்றது. ஏனெனில் காலை 7 மணிக்கு யாழில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு சென்னையில் கடமைகள் , கல்வியை நிறைவு செய்து மாலை 4 மணிக்கு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியவர்கள் தற்போதும் உள்ளனர். அத்துடன் அந்த நேரம் விமானச் சீட்டின் பெறுமதியும் 350 ரூபாவாகவும் இருந்தது என்கின்றனர்.

இந்த பெறுமதி ஏற்படாது விடினும் இந்த நிலமை ஏற்பட வேண்டும் என்ற நியாயமான ஆவலுகளை நிறைவேற்ற இலங்கை அரசு முன்வர வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

– ந.லோகதயாளன்