SuperTopAds

போர்வைக்குள் முத்தம்!! -பிக்பாஸ் வீட்டுக்குள் சம்பவம்-

ஆசிரியர் - Editor II
போர்வைக்குள் முத்தம்!! -பிக்பாஸ் வீட்டுக்குள் சம்பவம்-

பிக்பாஸ் வீட்டில் ஜோடியாக நுழைந்துள்ள இருவர் போர்வையை போத்திக் கொண்டு முத்தமிடும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் இச் சம்பவம் நடந்தது தமிழ் பிக்பாஸில் அல்ல தெலுங்கில். தமிழில் பிக்பாஸ் சீசன் 6 கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 6 கடந்த செப்டம்பர் மாதமே ஆரம்பமாகிவிட்டது. 

தமிழைப் போலவே தெலுங்கிலும் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய இந்த சீசனில் 7 பேர் வேளியேற்றப்பட்டுவிட்டனர். தற்போது உள்ள 14 போட்டியாளர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகின்றது. 

இதில் ரோஹித் சாஹினி - மரினா ஆப்ரஹாம் கணவன் மனைவி என ஜோடியாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டின் படுக்கையறையில் வைத்து முதலில் வெளிப்படையாகவே கண்ணத்தில் முத்தமிடுகிறார்கள். அதன் பின் கேமராவை பார்த்து சுதாரித்துக் கொண்டு போர்வையை மூடி முத்தமிடுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.