யாழ்.சாவகச்சோி புகைரத கடவைகளில் எச்சரிக்கை விளக்கு மற்றும் ஒலி நேற்று முழுவதும் தொடர்ந்து இயங்கிதால் மக்கள் அச்சம்! கண்டுகொள்ளாத புகைரத திணைக்களம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி புகைரத கடவைகளில் எச்சரிக்கை விளக்கு மற்றும் ஒலி நேற்று முழுவதும் தொடர்ந்து இயங்கிதால் மக்கள் அச்சம்! கண்டுகொள்ளாத புகைரத திணைக்களம்..

யாழ்.சாவகச்சோி நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் உள்ள சில புகைரத கடவைகளில் உள்ள எச்சரிக்கை விளக்கு மற்றும் ஒலி நேற்று காலை தொடக்கம் நள்ளிரவு வரையில் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருந்த நிலையில் மக்கள் அச்சத்துடனேயே அந்த பகுதி ஊடாக பயணித்துள்ளனர். 

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிட கடவை மற்றும் சங்கத்தானை, மீசாலை சந்தி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் புகையிரத கடவை எச்சரிக்கை விளக்கும், ஒலியும் காலை முதல் தொடர்ச்சியாக இயங்கிய வண்ணமே இருந்துள்ளது. 

இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் கடவையை கடக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகினர். ஏனெனில் தொடர்ச்சியாக புகையிரத கடவை சமிக்ஞை இயங்குவதால் மக்கள் புகையிரதம் வருகின்ற நேரத்திலும் 

அதனை சாதாரணமாக கடக்க முற்படுகின்ற பொழுது பாரிய விபத்துக்கள் ஏற்படுகின்ற அபாயம் உண்டு. இது தொடர்பாக புகையிரத திணைகளத்தினர் நேற்று முழுவதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வராதது 

மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு