யாழ்.தெல்லிப்பழையில் வீடு புகுந்து வயோதிப பெண்ணை மலசலகூடத்தில் தள்ளி நகைகள் கொள்ளை! ஒருவரை மடக்கிய பொலிஸார்..
யாழ்.தெல்லிப்பழையில் வீடு புகுந்து வீட்டிலிருந்த வயோதிப பெண்ணை மலசல கூடத்திற்குள் தள்ளி விழுத்தி 3 பவுண் நகைகளை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்கள், வீடுடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் விசாரணைகளின் பின் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.