SuperTopAds

யாழ்ப்பாணத்தில் இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனரால் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த பயங்கரம்! பஸ்ஸினால் மோதி கொலை முயற்சி, பேருந்தில் இழுத்து ஏற்றி தாக்குதல்...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனரால் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த பயங்கரம்! பஸ்ஸினால் மோதி கொலை முயற்சி, பேருந்தில் இழுத்து ஏற்றி தாக்குதல்...

இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் சிலர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

மாலை 6 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மீசாலை - புத்துார் சந்திவரை பயணிக்கவேண்டிய மாணவர்கள் மற்றும் மாணவிகள் யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு  இ.போ.ச பேருந்தில் ஏற முயற்சித்துள்ளனர். 

இதன்போது மாணவ மாணவிகளை ஏற வேண்டாம் என்று சாரதியும் நடத்துனரும் பேசினர். ஏன் ஏற வேண்டாம் என்று கேட்ட மாணவன் மீது சாரதியும் நடத்துனரும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். 

இது தொடர்பாக யாழ்.பேருந்து நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் முறையிட்டபோது அங்கிருந்தவர்களும், சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் சேர்ந்து மாணவர்களை மிக மோசமாக அச்சுறுத்தியுள்ளனர். 

இதனால் அச்சமடைந்த மாணவ மாணவிகள் கதிர்காமம் செல்லும் இ.போ.ச பேருந்தில் ஏறி கொடிகாமத்தில் இறங்கியபோது துரத்தி வந்த யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு சேவையில் ஈடுபடும் சாரதியும் நடத்துனரும் 

கொடிகாமத்தில் இறங்கிய மாணவர்கள் இருவரை பிடித்து தமது பேருந்தின் உள்ளே இழுத்து தாக்க முற்பட்டனர். இதனால் மற்றைய மாணவர் தனது சக மாணவர்களை கீழே இறக்கி விடுமாறு கேட்ட அருகில் சென்றபோது 

மாணவர்களை இறக்கி விட்டு பேருந்தை முன்னோக்கி செலுத்தி அருகில் நின்ற மாணவனை இடித்து விழுத்திவிட்டு பேருந்தை எடுத்து சென்றனர்.

இதனால் அந்த மாணவன் பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இபோ.சபை ஏன் பாடசாலை மாணவர்களுக்கு பருவகாலச்சீட்டை வழங்குகிறது வழங்கிய பின்னர் ஏன் ஏற்ற மறுக்கின்றனர் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேள்வி எழுப்பினர் ஆகவே இ.போ.ச நடத்துநர் மற்றும் சாரதியினால் 

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குறித்த விடையம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பிரதான பிரதி பிராந்திய முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது 

குறித்த விடயம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளதாகவும் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதியளித்தார்.