வீதியால் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி! சிறு பிள்ளைகளுடன் தெய்வாதீனமாக தப்பிய குடும்பம்..

ஆசிரியர் - Editor I
வீதியால் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி! சிறு பிள்ளைகளுடன் தெய்வாதீனமாக தப்பிய குடும்பம்..

வீதியால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பிடித்து சேதமடைந்துள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு 

நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் இவ்வாறு முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்துள்ளது.

முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்த போது அருகில் இருந்தவர்கள் பல வழிகளில் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முச்சக்கரவண்டி இவ்வாறு தீப்பற்றி எரிந்தபோது, முச்சக்கரவண்டிக்குள் தாய், தந்தை மற்றும் மகளும் பயணித்துக்கொண்டிருந்ததுடன், 

தந்தையே முச்சக்கரவண்டியை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.குறித்த மூவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், 

இந்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு