SuperTopAds

நடிகை மீராமிதுன் மாயம்!! -தாயார் பொலிஸில் முறைப்பாடு-

ஆசிரியர் - Editor II
நடிகை மீராமிதுன் மாயம்!! -தாயார் பொலிஸில் முறைப்பாடு-

நடிகை மீராமிதுன் மீது வழக்கு தொடுக்கப்பட்டதை அடுத்து அவர் கடந்த சில தினங்களாகவே தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் அவரை கண்டுபிடித்து தருமாறு தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

நடிகை மீராமிதுன் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டி அடிப்படையில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் இருவரையும் கைது செய்தனர். இதன்பின் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணைசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதன் விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பெங்களூருவில் தலைமறைவாக உள்ளதாகவும் அவரை விரைவில் கைது செய்வோம் என்று பொலிஸார் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

இருப்பினும் மீரா மிதுன் அடிக்கடி இடத்தை மாற்றி வருவதால் பொலிஸாரினால் அவரை கைது செய்ய முடியாமல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அவர் கைபேசி இலக்கத்தையும் மாற்றி வருவதால் அவர் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று மாலை மீரா மிதுன் தாயார் ஷியாமலா சென்னை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன் தங்களின் தொடர்பில் இல்லை. வழக்கை சந்தித்து வந்தபோதிலும், தொடர்ந்து எங்களிடம் தொடர்பில் இருந்தார். 

ஆனால் சில நாட்களாக தொலைபேசியிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.