SuperTopAds

மஹிந்த உள்ளிட்ட ஆழுங்கட்சியினர் சிலர் இல்லை, எதிர்கட்சியின் பூரண ஆதரவுடன் நிறைவேறிய 22வது அரசியலமைப்பு திருத்தம்! அடுத்து நடக்கப்போவது என்ன?

ஆசிரியர் - Editor I
மஹிந்த உள்ளிட்ட ஆழுங்கட்சியினர் சிலர் இல்லை, எதிர்கட்சியின் பூரண ஆதரவுடன் நிறைவேறிய 22வது அரசியலமைப்பு திருத்தம்! அடுத்து நடக்கப்போவது என்ன?

22வது அரசியலமைப்பு திருத்தம் 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் எதிராக ஒரு வாக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சரத் வீரசேகர எம்.பி மாத்திரம் எதிராக வாக்களித்தார். ஆதரவாக 179 வாக்குகள் பதிவானது இதன் காரணமாக 22ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன ஆதரவு வழங்கியிருந்தன.

மேலும், மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஆழுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.