மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷியா தாக்குதல்!! -இருளில் மூழ்கிய உக்ரைன்-

ஆசிரியர் - Editor II
மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷியா தாக்குதல்!! -இருளில் மூழ்கிய உக்ரைன்-

உக்ரைன் நாட்டில் இயங்கிவரும் மின்சார உற்பத்தி நிலையங்கள் மீது ரஷியா படைகள் நடத்திய தாக்குதலால் அங்குள்ள சில நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதலின் காரணமாக, கீவ் உள்ளிட்ட நகரங்கள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளன. ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மின் தடையும், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால், உக்ரைன் மக்கள் பரிதவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு