இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தீவிர விசாரணையில் பொலிஸார், ஒருவர் கைது!

நெடுங்கேணி - சிவா நகர் பகுதியில் இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தீவிர விசாரணைகளை பொலிஸார் முடுக்கிவிட்டிருக்கின்றனர்.
சிவா நகர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் து.பிரமிளா (வயது 21) என்ற இளம்பெண் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.