இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை பெறலாம்!! -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு-

ஆசிரியர் - Editor II
இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை பெறலாம்!! -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு-

இலங்கையில் துன்புறுத்தப்படும் இந்து தமிழர்கள் சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெறலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையைச் சேர்ந்த அபிராமி, 29, தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

ஒக்டோபர் 16, ஞாயிற்றுக்கிழமை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், 2019 குடியுரிமை சட்டத்தின் கொள்கைகளை, இலங்கையை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்துத் தமிழர்களுக்குப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் ஒற்றை நீதிபதி பெஞ்ச், இலங்கை சி.ஏ.ஏ இன் கீழ் இல்லை என்றாலும், தீவில் உள்ள இந்து தமிழர்கள் 'இன கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள்' என்பதால், அந்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் என்று கூறியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு