பாடசாலை நாளில் படம் பார்ப்பதற்றாக மாணவர்களை யாழ்ப்பாணம் அழைத்துவந்த தனியார் கல்வி நிலையம்! பெற்றோர் காலில் விழுகிராம் உடந்தையாக இருந்த பாடசாலை அதிபர்..
பாடசாலை நாளான கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு வலய பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்களை தனியார் கல்வி நிலையம் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் பொன்னியின் செல்வன் படம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த விடையம் தொடர்பில் கல்வி உயர்மட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் குறித்த பாடசாலைகளிடம் வடமாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளதாக அறிய கிடைத்துள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமது தனியார் கல்வி நிறுவனங்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாமல் பாடசாலை நாளில் மாணவர்களை இவ்வாறு அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த முல்லைத்தீவு வலயப் பாடசாலை மாணவர்கள் பாடசாலை செல்லாது திரையரங்கு சென்றமை தொடர்பில் பாடசாலை அதிபர் தனக்கு ஏதேனும் விசாரணைகளிடம் பெறாமல் இருக்க
பெற்றோர்களை அழைத்து நீங்களே அனுப்பி வைத்ததாக எழுத்து மூலம் தாருங்கள் என கேட்கப்பட்டுள்ளதாகவும் அறிய கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு முல்லைத்தீவில் இருந்து
பொன்னியின் செல்வன் படம் பார்க்க செல்வதற்காக ஒரு மாணவரிடம் இருந்து சுமார் 1500 ரூபா வரை அறவிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.