யாழ்.இளவாலை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து!

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து!

யாழ்.இளவாலை - பொியவிளான் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதில் கீரிமலை, இளவாலை பகுதிகளைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் தெல்லிப்பழை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு