SuperTopAds

உக்ரேன் போரில் ஆயுதமாக பாலியல் வல்லுறவு!! -பகிரங்கமாக குற்றம் சுமத்தும் ஐ.நா. விசேட தூதுவர்-

ஆசிரியர் - Editor II
உக்ரேன் போரில் ஆயுதமாக பாலியல் வல்லுறவு!! -பகிரங்கமாக குற்றம் சுமத்தும் ஐ.நா. விசேட தூதுவர்-

உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினர் பாலியல் வல்லுறவை ஒரு போரியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், இதற்காக இராணுவத்தினருக்கு வயாகராவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாலியில் வன்முறைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட தூதுவர்  பிரமிளா பட்டேன் குற்றம் சுமத்தியுள்ளார். 

ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் மேற்படிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

பெண்கள் பல நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, வல்லுறவுக்கு உட்படுத்தப்படும்போது, சிறுவர்களையும் ஆண்களையும் வல்லுறவுக்குட்படுத்த தொடங்கும்போது, தொடர்ச்சியாக பிறப்புறுப்பு சிதைவுகளை காணும்போது, ரஷ்ய சிப்பாய்கள் வயாகராக்களை வைத்திருப்பது தொடர்பில் பெண்கள் சாட்சியமளிப்பதை கேட்கும்போது அது தெளிவாக ஒரு இராணுவ தந்திரோபாயம் தான் என்பது தெரிவிக்கின்றது. 

பாலியல் வல்லுறவுகளின் போது கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தவற்றை நோக்கும்போது, இது மக்களை  வேண்டுமென்றே மனிதத் தன்மையின்றி நடத்தும் நடவடிக்கை என்பது தெளிவாகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.