SuperTopAds

நிறைமாத கர்ப்பிணியை நாட்டைவிட்டு வெளியேற்ற கடும் முயற்சி!! -பிரித்தானியாவல் வலுக்கும் எதிர்ப்பு-

ஆசிரியர் - Editor II
நிறைமாத கர்ப்பிணியை நாட்டைவிட்டு வெளியேற்ற கடும் முயற்சி!! -பிரித்தானியாவல் வலுக்கும் எதிர்ப்பு-

பிரித்தானியாவில் உள்ள எரித்திரியாவைச் சேர்ந்த பலாத்காரத்திற்கு உள்ளானவரும் தற்போது 37 வார கர்ப்பிணியுமான குறித்த 28 வயது நிறைமாத கர்ப்பிணியை ருவாண்டாவிற்கு வலுக்கட்டாயமாக வெளியேற்ற உள்விவகார அமைச்சகம் அச்சுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் தங்கள் எதிர்ப்பை மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. நீதிமன்றத்தில் தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 

அண்மைக்காலமாக புகலிடம் கோரி பிரித்தானியாவுக்கு வரும் மக்களை வலுக்கட்டாயமாக ருவாண்டாவிற்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

பலாத்காரத்திற்கு உள்ளானவரும் தற்போது 37 வார கர்ப்பிணியுமான குறித்த 28 வயது பெண் வெளியேற்றப்படும் அச்சுறுத்தல் காரணமாக கடுமையான மனக்குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.

ஜூலை மாதம் சிறிய படகு ஒன்றில் பிரித்தானியா வந்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதை உள்விவகார அலுவலக அதிகாரிகள் தெரிந்துகொண்டனர். இதனையடுத்து அவருக்கு கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டுமின்றி, அவர் தங்கவைக்கப்பட்டிருந்த ஹொட்டலில் இருந்து, கர்ப்பிணி என்பதால் இன்னொரு வசதியான ஹொட்டலுக்கும் மாற்றியுள்ளனர். ஆனால் தற்போது ருவாண்டாவுக்கு வெளியேற்றப்படும் சூழல் எழுந்துள்ளதால் மனமுடைந்து போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.