SuperTopAds

கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக அமையும்!

ஆசிரியர் - Admin
கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக அமையும்!

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.     

சீன நிதி அமைச்சருடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை அண்மையில் முன்னெடுத்திருந்தாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகருக்கு சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள பிரதான நாடுகளான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.