SuperTopAds

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு!! -6 மாத பின் பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்-

ஆசிரியர் - Editor II
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு!! -6 மாத பின் பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்-

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்களாக ஆய்வு செய்து வந்த நாசா விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர். 

நாசாவின் நான்கு விண்வெளி வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். 

விண்வெளி நிலையத்தில் சுமார் ஆறு மாதகாலமாக தங்கியிருந்து ஆய்வு நடத்திய அவர்கள், நேற்று வெள்ளிக்கிழமை பூமிக்கு திரும்பினர். அவர்களின் விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.

விண்கலமானது, விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறிய சுமார் 5 மணி நேரத்திற்குப் பின், புளோரிடாவின் ஜாக்சன்வில்லிக்கு அருகில் கடலில் பாராசூட் மூலம் இறங்கியது. 

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக, ஸ்பேஸ்எக்ஸ் கடந்த வாரம் வேறு வீரர்களை அனுப்பியது. தற்போது விண்வெளி நிலையத்தில் மூன்று அமெரிக்கர்கள், மூன்று ரஷியர்கள் மற்றும் ஒரு ஜப்பானியர் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.