மைத்திரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு இடைநிறுத்த உத்தரவு!

ஆசிரியர் - Admin
மைத்திரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு இடைநிறுத்த உத்தரவு!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.     

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வருகைதந்திருந்தார்.

ஈஸ்டர் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான தனிப்பட்ட முறைப்பாடு வழக்கை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு