மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பஸ்டார்!! -எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பஸ்டார்!! -எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்-

தமிழ் திரையுலகின் சூப்பஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினி நடித்த தளபதி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ளது. சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில்  அப்போதே ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று ரஜினி கேட்டதாகவும், மணிரத்னம் சொன்ன ஒரு கரு ரஜினிகாந்துக்கு பிடித்து போனதாகவும், அந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. 

ஆனாலும் மணிரத்னம் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை. இவர்கள் கூட்டணி மீண்டும் அமைந்தால் பிரமாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு