நயனின் இரட்டை குழந்தை விவகாரத்தில் தோழிகளுக்கு தொடர்பு!!
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தை விவகாரத்தில் நயன்தாராவின் தோழிகளுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நயன்தாராவுக்கு வாடகைத்தாயாக உதவியவர் கேரளாவை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. நயன்தாரா கேரள மாநிலம் திருவல்லாவில் கல்லூரி படிப்பை படித்துள்ளார். அவரது கல்லூரி தோழிகள் சிலர் உதவியுடன்தான் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்துள்ளார்கள் என்றும் அந்த பெண் நயன்தாராவின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
நயன்தாராவிடம் விசாரித்து பின்னர் வாடகை தாயான அந்த பெண்ணிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.