SuperTopAds

நயன்தாராவுக்கு உதவிய வைத்தியசாலை மீது நடவடிக்கை!! -நாளை ஆரம்பமாகிறது விசாரணை-

ஆசிரியர் - Editor II
நயன்தாராவுக்கு உதவிய வைத்தியசாலை மீது நடவடிக்கை!! -நாளை ஆரம்பமாகிறது விசாரணை-

நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்று கொள்வதற்கு உதவி செய்த மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது அனைவரது பார்வையும் திரும்பி உள்ளது.

நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரபலமான தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளன.

நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. 

ஆனால் நடிகை நயன்தாரா இந்த விடயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அண்மையில் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். 

வாடகை தாய் சட்ட விசயத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

இந்தநிலையில் நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்று கொள்வதற்கு உதவி செய்த வைத்தியசாலை மற்றும் வைத்தியர்கள் மீது அனைவரது பார்வையும் திரும்பி உள்ளது. நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரபலமான தனியார் வைத்தியசாலையில் பிறந்துள்ளன.

அந்த வைத்தியசாலையில் உள்ள சில வைத்தியர்கள் தான் நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் விடயத்தில் ஆலோசனைகள் வழங்கியதாக தெரியவந்துள்ளது. எனவே அவர்களிடம் விசாரணை நடத்துவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விவாதித்து வருகிறார்கள். எனவே நயன்தாராவுக்கு உதவி செய்த வைத்தியசாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா விவகாரத்தில் மருத்துவ துறை அதிகாரிகள் நாளை வியாழக்கிழமை விசாரணை ஆரம்பிக்கவுள்ளனர். விசாரணை எத்தனை நாட்களுக்கு நடக்கும் என்பது தெரியவில்லை. மருத்துவ துறையை சேர்ந்த 4 அதிகாரிகளை கொண்ட குழு நயன்தாராவிடம் விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.