156 ஆவது மாகாண ரீதியாக பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கை(video)
156 ஆவது மாகாண மட்ட ரீதியாக இடம்பெறவுள்ள பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
எதிர்வரும் சனிக்கிழமை(15) மாலை அம்பாறை நகர சபை மைதானத்தில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன உட்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
இன்று குறித்த கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறியுடன் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்கவும் இணைந்து மேற்குறித்த நிகழ்வின் முன்னாயத்த விடயங்களை ஆராய்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினர்.
குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமத பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது உயிர்நீத்த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும்இ பொலிஸாரும் இணைந்து அஞ்சலி செலுத்தவுள்ளதுடன் தேசிய கொடி மற்றும் பொலிஸாரின் கொடி என்பனவும் ஏற்றப்படவுள்ளன.
மேலம் 156 பொலிஸ் தின நிகழ்வின் போது ஆண் பெண் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்பு விசேட அதிரடிப்படையின் நிகழ்வுகள் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகசங்கள் வர்ண வானவேடிக்கை நிகழ்வு குதிரைப்படை நிகழ்வு மோட்டார் சைக்கிள் பவனி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெற உள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.