திடீர் காய்ச்சல் மற்றும் மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!

திடீர் மயக்கம் மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 42 பேர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இப்பாடசாலையில் 6ஆம் ஆண்டு முதல் 11ஆம் ஆண்டு வரை கல்வி கற்கும் 13 மாணவர்களும், 29 மாணவிகளும் மயக்கம்,
காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்,
மற்றுமொரு மாணவர்கள் குழாம் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை.
என கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.