இந்து என்பது மதம் அல்ல தர்மம்!! -அமெரிக்காவில் முழங்கிய ராஜமவுலி-
இந்திய சினிமா துறையில் முன்னணி இயக்குணர்களில் ஒருவராக எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் ஒஸ்கர் விருதுக்கு பல பிரிவுகளில் போட்டியிடுகிறது.
இதற்காக படம் குறித்த நிகழ்ச்சிகளுக்காக ராஜமவுலி அமெரிக்கா சென்றுள்ளர். அங்கு ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் இந்து மதத்தை உயர்த்தி பிடிக்கிறதே என்று கேள்வி எழுப்ப்பட்டது.
அதற்கு ராஜமவுலி அளித்த பதில் வருமாறு:- பலரும் இந்து என்பது மதம் என நினைக்கிறார்கள். அப்படியல்ல, அது தர்மம், இன்றைய காலக்கட்டத்தில் தான் அது மதம்.
ஆனால், இந்து மதத்திற்கு முன்பு அது 'இந்து தர்மமாக' இருந்தது. இந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை அது ஒரு தத்துவம். மதமாக எடுத்துக்கொண்டு பார்த்தால் நான் இந்து அல்ல.
அதே சமயம் 'இந்து தர்மம்' என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் தீவிர இந்துதான். நான் படத்தில் சித்தரிப்பது உண்மையில் பல, பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான்.
வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும், அதனால் வரும் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதையும் இந்து தர்மம் போதிக்கிறது. எனவே, நான் இந்து தர்மத்தைப் பின்பற்றுகிறேன், இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.