பதவி இல்லாமல் தவித்து வருகிறது ராஜபக்ச குடும்பம்!
ராஜபக்ச குடும்பம் பதவி இல்லாமல் தற்போது தவித்து வருகின்றனர் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் பதவி இல்லாமல் தற்போது தவித்து வருகின்றனர் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ராஜ பக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை,அவர்களின் தீவிர விசுவாசியான அபய குணவர்தன வெளிப்படுத்தியுள்ளார்.இவர்களுக்கு ஒரு நோய் உள்ளது.பதவி இல்லையென்றால் இவர்கள் இருக்க மாட்டார்கள்.அத்துடன் ராஜபக்சாக்களின் குடும்பத்தில் படரும் தாவரங்கள் இவர்கள்.
சுப்ரிம் நீதிமன்றில் ராஜ பக்ஸாக்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளன.சர்வதேச நீதி மன்றிலும் இவர்களுக்கு சிக்கல் உள்ளது.ஆகவே எல்லா பக்கமும் இவர்களுக்கு சிக்கல் தான்.ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர்கள் மீது பொருளாதார குற்றங்கள் உள்ளன.ஆகவே ரணிலை வைத்து எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று ஜோசிக்கிறார்கள்.
பாராளுமன்றில் பெரும்பான்மை காணப்படுவதால் மீண்டும் ஆட்சி பீடம் ஏறலாம் என்ற எண்ணமும் இவர்களுக்கு வந்துள்ளது.மக்கள் இப்போது நன்றாக மக்கள் உணர்ந்து விட்டனர்.இவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.என்றாலும் ஆட்சிக்கு வருவதற்கு ஆசைப்படுகின்றனர் என்றார்.