இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது கனடா அதிரடி பயணத் தடை!!
ஐ.நா பேரவையில் இலங்கை தொடர்பாக கடந்த வாரம் உள்ளீர்க்கப்பட்ட தீர்மானம் உறுப்பு நாடுகளால் இராணுவ அதிகாரிகளுக்கு உடனடிப் பயணத் தடைகளை விதிப்பதை கொண்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதல் நகர்வை மேற்கொள்ளவுள்ள கனடா, குறைந்தது 3 இராணுவ அதிகாரிகளைப் பெயரிடுமெனவும், இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய உறுப்பு நாடுகளும் பின்பற்றும் என்றும் அறியவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவை தளமாகக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவை வியாழனன்று 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மினத உரிமைகளை மேம்படுத்துதல்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.