SuperTopAds

சுனாமியில் காணாமல் போன மனைவி!! -9 வருடங்களாக கடலில் தேடும் காதல் கணவர்-

ஆசிரியர் - Editor II
சுனாமியில் காணாமல் போன மனைவி!! -9 வருடங்களாக கடலில் தேடும் காதல் கணவர்-

ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் காணாமல்போன தன்னுடைய மனைவியின் உடலைத் தேடி ஒவ்வொரு வாரமும் டைவிங் செய்து வருகிறார் அவரின் காதல் கணவர்.

இந்த சுனாமி ஏற்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தப் பேரழிவில் 19,759 பேர் இறந்ததாகவும், 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல்போனதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஜப்பானில் யசுவோ தகமாட்சு-யூகோ தகமாட்சு தம்பதியர் வசித்து வந்தனர். சுனாமியின்போது தம்பதி வசித்துவந்த ஒனாகவா பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்போது யூகோ காணம ல்போனதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து சுனாமியில் உயிர்பிழைத்த அவர் கணவர் யசுவோ, சுமார் 11 வருடங்களாகத் தன் மனைவியைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார். 

தற்போது 65 வயதாகும் யசுவோ ஹஎன்னுடைய மனைவியின் உடலை எப்படியாவது கண்டுபிடிப்பேன் என நம்பிக்கையுடன் இரண்டு ஆண்டுகள் நிலத்திலும், 2013 ஆம் ஆண்டிலிருந்தது கடல் பகுதியிலும் தேடிக்கொண்டிருக்கிறார். தற்போது ஒவ்வொரு வாரமும் தன் மனைவியின் உடலைத் தேடி அவர் கடலில் டைவிங் செய்து வருகிறார்.