தி.மு.க தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு!! -தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்-

ஆசிரியர் - Editor II
தி.மு.க தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு!! -தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்-

தி.மு.க தலைவர் பதவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க தலைமை அறிவித்திருந்தது.

தி.மு.க உட்கட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 71 மாவட்டச் செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தலில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

7 மாவட்டச் செயலாளர்கள் மட்டும் புதியவர்கள். இதன் அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க வரும் 9 ஆம் திகதி பொதுக்குழு கூடுகிறது.

இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று வெள்ளிக்கிழமை அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

தற்போது தி.மு.க தலைவராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு