SuperTopAds

கோவில் நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி நடவடிக்கை

ஆசிரியர் - Editor III
கோவில் நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி நடவடிக்கை

கோவில் நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி கல்முனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை(28) அன்று மாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு காளி கோவில் பகுதியில் இரு சாராருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் பலர் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இருந்த போதிலும் குறித்த கோவில் நிகழ்வு தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர்  ஏற்பட்ட பிணக்கு தொடர்பில்  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊடாக முறைப்பாடுகள் இரு தரப்பினராலும் வழங்கப்பட்டிருந்ததுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றம் கோவில் நிகழ்வு தொடர்பில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் சம்பவ தினமன்று இரு தரப்பினரும் கொட்டன் தடி வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோவிலுக்கு வந்திருந்த பெண்கள் மற்றும் எதிர் தரப்பினரை  மாறி மாறி தாக்கி  தப்பிச் சென்றிருந்தனர்.

இத் தாக்குதல் தொடர்பான காணோளிகள் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பாரிய விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருந்தது.

இதனை அடுத்து குறித்த காணொளிகளை முன்வைத்து தாக்குதலாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.