கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் உங்கள் கவனத்துக்கு.
அஸ்ஸலாமு அலைக்கும்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களே இது உங்கள் கவனத்துக்கு.
ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் இவ்வளவு காலமாக இயங்கிக் கொண்டிருந்த Ambulance வண்டி இப்போது (மூன்று மாதங்களுக்கு) மேலாக அங்கு இல்லாமல் நோயாளிகளாக வரும் பொதுமக்கள் மிகவும் சங்கடத்துக்கு உள்ளாகின்றார்கள். காரணம் நோயாளிகளை வேறு பிரதேச (கல்முனை, மட்டக்களப்பு) போன்ற வைத்திய சாலைக்கு விரைவாக நேரத்துக்குள் கொண்டு செல்ல முடியாமல்.
மதிப்புக்குரிய வைத்திய பணிப்பாளர் Dr. றிபாஸ் அவர்களே ஒலுவில் ஊரைப் பொறுத்தவரை அதன் அமைவிடம் வேறு பிரதேசங்களைப் போன்று பிராதான வீதிகளில் இல்லாமல் ஊருக்குள் இருப்பதனால் அது நோயாளிகளுக்கு பலதரப்பட்ட சிரமங்களை கொடுக்கிறது என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை" உங்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும்.
இவ்வாறு இருக்கும் நிலையில் உங்கள் அனுமதியுடன்தான் இங்கு செயற்பட்ட அம்புலான்ஸ் வண்டியை கொண்டு சென்றிருக்க வேண்டும்.
அப்படி கொண்டு சென்ற Ambulance ஏன் இன்னும் திரும்ப ஒப்படைக்க வில்லை என்பதே மக்களின் ஆதங்கம்..
இங்கு உள்ள பொதுமக்களுக்கு நோய்கள் வருவதில்லையா?
அப்படி வருத்தம் வருபவர்களை உரிய முறைப்படி உரிய நேரத்தில் கொண்டு சென்று மேலதிக சிகிச்சை பெற்று அவர்களின் உயிரை பாதுக்காக்க வேண்டாமா.?
மற்ற ஊர் வைத்தியசாலையில் இருக்கும் நோயாளிகள் உரிய நேரத்தில் பூரண சிகிச்சை பெற்று காப்பாற்றப்பட வேண்டும்... இப்படியான கிராமங்களில் இருக்கும் உயிர்கள் பாதுகாக்க தேவையில்லை என்ற எண்ணத்தில் செயற்படுகிறீர்களா...?
இப்படியான அரசியல் அதிகாரம் இல்லாத ஊர்களை" நசுக்கி அரசியல் அதிகாரம் இருக்தின்ற ஊர்களை பலப்படுத்த நினைப்பது எந்த வகையில் நியாயம்? இதுதானா உங்கள் வைத்திய தர்மம்..?
உங்களைப் போன்ற அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் எதை செய்தாலும் இங்கு கேட்பதற்கு யாருமில்லை என்ற எண்ணத்திலா இப்படி பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகிறீர்கள்..?
எகவே மதிப்புக்குரிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களே தொடர்ந்தும் இவ்வாறு மாற்றுக்கண் கொண்டு பார்த்து! ஒலுவில் மக்களின் உயிர்களின் விளையாடாமல் தயவுசெய்து ஒலுவில் வைத்தியசாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அம்புலான்ஸை மீண்டும் மக்களின் தேவைக்காக நிரந்தமாக கொண்டு வந்து கொடுத்து அந்த மக்களுக்கு உதவும்படி மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
இப்படிக்கு
ஊரில் ஒருவன்
Oluvil Jaleel.