SuperTopAds

உலகின் முதல் பறக்கும் தட்டு!! -அடுத்தாண்டு அறிமுகம்-

ஆசிரியர் - Editor II
உலகின் முதல் பறக்கும் தட்டு!! -அடுத்தாண்டு அறிமுகம்-

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் படகு அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்தின் 'தி ஜெட் ஜீரோஎமிசன்' நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இப் படகு அலையின் மேற்பரப்பில் இருந்து மூன்று அடி உயரத்தில் பறக்கும். மணிக்கு 76 கி.மீ வேகத்தில் செல்லும். அடுத்தாண்டு துபாயில் ஐ.நாவின் 23 ஆவது பருவநிலை மாற்றம் மாநாடு நடத்தப்பட உள்ளது. 

இந்த நோக்கத்துடன் பொருந்தி செல்லும்விதமாக அச்சமயத்தில் இப்படகு துபாயில் அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள துபாயின் ஜினித் மரைன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மற்ற படகை போல அல்லாமல் இது ஹைட்ரஜன் எரிபொருள் இயங்குவதால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் வாயு வெளியேறுவதில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். 

இப்படகில் இருந்து சத்தம் (ஒலி), அதிர்வு ஏற்படாது. இது மகிழ்ச்சியான பயணத்துக்கு ஏற்றது. இதிலுள்ள இறக்கை அமைப்பு கீழ்நோக்கி இருக்கும். இது பயணிக்கும்போது தண்ணீரை கிழித்துக்கொண்டே செல்லும். ஹைட்ரஜன் ஆக்சிஜனோடு எரிந்து இதற்கு தேவையான ஹைட்ரஜன் எரிபொருள் கிடைக்கிறது.

படகின் நீளம் 32 அடி. எடை 5400 கிலோ. இதில் பைலட், 12 பயணிகள் பயணிக்கலாம். லக்கேஜ் வைப்பதற்கான இடமும் உள்ளது. இது குறிப்பாக ரெஸ்டாரென்ட், தனி நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. இதனால் சுற்று சூழல் மாசுபடுகிறது. ஹைட்ரஜன் ஆக்சிஜனோடு எரிந்து மின்னாற்றலாகவும், நீராவியாகவும் மாறுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. இயற்கையில் ஹைட்ரஜன் வளம் மிக குறைவு. இது தண்ணீர், மீத்தேன் போன்றவற்றை பிரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.