மீனவர்கள் காணாமல் போவதை தடுக்க நவீன தொழில்நுட்பம்!!

ஆசிரியர் - Editor II
மீனவர்கள் காணாமல் போவதை தடுக்க நவீன தொழில்நுட்பம்!!

கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அடிக்கடி காணாமல் போவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தமிழக அரசின் சார்பில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-

இந்த டிஜிட்டல் யுகத்தில், சாதாரண மக்களுக்கும் தொழில்நுட்பத்தின் பயன்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.தமிழகத்தில் மீனவர்கள் காணாமல் போவது, அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், சில தொழில்நுட்பங்கள் உள்ளன. இவற்றை தமிழகத்தில் செயல்படுத்த, மீன் வளத் துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு