கலெக்ஷன் வேட்டையில் பொன்னியின் செல்வன்!! -3 நாள் 230 கோடி வசூல்-

ஆசிரியர் - Editor II
கலெக்ஷன் வேட்டையில் பொன்னியின் செல்வன்!! -3 நாள் 230 கோடி வசூல்-

பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி திரைப்படம் வெளியாகி இருந்தது.

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல நடிகர்கள் நடித்துள்ள இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 500 கோடி ரூபா பட்ஜெட்டில் தயாரான இப்படம் எவ்வளவு வசூலிக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ளது.

இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 80 கோடி ரூபா வசூல் செய்து மாஸ் செய்தது. தற்போது 3 நாள் முடிவில் உலகம் முழுவதும் படம் 230 கோடி ரூபா வரை வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் நல்ல வசூல் வரும் என்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு