துப்பாக்கி பயிற்சியில் யஷ்!!

ஆசிரியர் - Editor II
துப்பாக்கி பயிற்சியில் யஷ்!!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் யஷ் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யஷ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப். 2-ம் பாகம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தது.

சமீபத்தில் வெளியான கேஜிஎப்-2 திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்கு தள்ளி புதிய வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து யஷின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து வருகிறது.

இதையடுத்து வரலாற்று பாணியில் உருவாகவுள்ள படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் யஷ் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு