காணாமல்போன யாழ்.மீனவா்கள் 3 பேரும் இந்திய மீனவா்கள் உதவியால் காப்பாற்றப்பட்டனா்...

ஆசிரியர் - Editor I
காணாமல்போன யாழ்.மீனவா்கள் 3 பேரும் இந்திய மீனவா்கள் உதவியால் காப்பாற்றப்பட்டனா்...

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை கடற்றொழிலிற்கு றோளரில் சென்ற நிலையில் காணமல்போன மூவரும் 50 மணிநேரத்தின் பின்பு நேற்றைய தினம் இந்திய மீனவர்களின் உதவியால் பத்திரமாக கரை திரும்பினர்.

நாவாந்துரையில் இருந்து 0003 இலக்கப் படகு மூலம் ஜோன் மைக்கல் விமல் வயது 44 , செபமாலை அலெக்ஸ் வயது 35 , மகேந்திரன் ரூபன் வயது 30 ஆகியோர் கடந்த சனிக்கிழமை கடற்றொழிலுக்காக சென்றிருந்தனர்.

இவ்வாறு கடற்றொழிலிற்காகச் சென்ற நிலையில் நெடுந்தீவிற்கு அண்மைப் பகுதியில் படகின் இயந்திரத்தில் வலை சிக்கியதனால் கடலில் தத்தளிப்பதாக வீட்டாருக்கு நேற்று முன்தினம் காலை 10.30ற்கு தகவல் வழங்கியுள்ளனர். இருப்பினும் அதன் பின்பு தொலைபேசியும் இயங்கவில்லை.

இதன் காரணத்தினால் உறவினர்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனைநடுத்து குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்படி செய்தியை உறுதி செய்த்தோடு குறித்த மீனவர்களின் விடயம் உடனடியாக கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் காணமல்போன மீனவர்களைத் சக மீனவர்களும் தேடி கடலிற்குச் சென்றிருந்த்தோடு கடற்படையினரும் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் படகு அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் கடலில் தென்பட்ட படகிடம் உதவி கோரியுள்ளனர். அவ்வாறு உதவிக்கு அழைத்த படகில் வந்த இந்திய மீனவர்கள் உணவும் இயந்திரத்தில் சிக்கிய ஊசி வலையினை அறுப்பதற்கான கத்தியும் வழங்கி உதவினர்.

அதன் பின்னர் இயந்திரத்தில் சிக்கிய வலைகளை அறுத்து இயந்திரத்தினை சீர் செய்து கரை திரும்பியதாக படகில் சிக்குண்டு கரை திரும்பிய மீனவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு