திடீரென கடல் உள்வாங்கியது!! -கன்னியாகுமரியில் பரபரப்பு-

ஆசிரியர் - Editor II
திடீரென கடல் உள்வாங்கியது!! -கன்னியாகுமரியில் பரபரப்பு-

கன்னியாகுமரியில் நேற்று சனிக்கிழமை இரவு கடல் 'திடீர்' என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. 

இருப்பினும் எவ்விதமான அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு கரைக்கு திரும்பினர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை பகுதியில் கடல் உள்வாங்கி இருந்தாலும் கன்னியாகுமரியில் வங்ககடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு