கொத்து கொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!! -அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்-

ஆசிரியர் - Editor II
கொத்து கொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!! -அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்-

அவுஸ்திரேலியாவில் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று முன்தினம் 200ற்க்கும் அதிகமான திமிங்கலங்கள் ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவற்றில் பாதிக்கும் அதிகமான திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே அவற்றை மீட்டு மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான முயற்சிகளில் கடற்படையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ள இடம் சிக்கலான பகுதியாக இருப்பதால் மீட்பு குழுக்களால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் உள்ளூர் மக்கள் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை போர்வையால் மூடியும், வாளிகளில் தண்ணீர் ஊற்றியும் அவற்றை உயிருடன் வைத்திருப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

அவுஸ்திரேலியாவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அரிதான விஷயமல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே டாஸ்மேனியா தீவு கடற்கரையில் 500க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் சுமார் 100 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்தமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு