மறைந்த மகாராணியின் அரிய புகைப்படம்!! -வெளியிட்டது அரச குடும்பம்-

ஆசிரியர் - Editor II
மறைந்த மகாராணியின் அரிய புகைப்படம்!! -வெளியிட்டது அரச குடும்பம்-

உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்ட இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இதுவரை வெளியிடப்படாத அரிய புகைப்படம் ஒன்றையும் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. 

எலிசபெத் மகாராணியின் இந்தப்படம் 1971 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து பால்மோரல் கோட்டையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப்படத்தை அரச குடும்பம், 'உங்கள் துயிலுக்காய் பறக்கும் தேவதைகள் பாடட்டும், மாட்சிமை தங்கிய மகாராணியின் நினைவாக' என்ற வார்த்தைகளுடன் வெளியிட்டுள்ளது.

 'உங்கள் துயிலுக்காய் பறக்கும் தேவதைகள் பாடட்டும்' என்ற வரிகள், ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லட்' நாடகத்தில் வரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி மரணம் அடைந்தார். மறுநாளில் நாட்டின் மன்னராக சார்ள்ஸ் அறிவிக்கப்பட்டார். 

மகாராணி எலிசபெத்தின் மறைவால் மேலும் ஒரு வாரம் அரச குடும்பத்தினர் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு