SuperTopAds

புதிய வைத்திய அத்தியட்சகர் வேண்டாம்! யாழ்.பருத்தித்துறை - மந்திகை வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சங்க பெயரில் கடிதம்..

ஆசிரியர் - Editor I
புதிய வைத்திய அத்தியட்சகர் வேண்டாம்! யாழ்.பருத்தித்துறை - மந்திகை வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சங்க பெயரில் கடிதம்..

யாழ்.பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தற்காலிக வைத்திய அத்தியட்சகர் நியமனம் தமக்கு வேண்டாம் என மேற்குறித்த  வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஏற்கனவே மந்திகை ஆதார வைத்திய சாலையில் தற்காலிக பொறுப்பதிகாரியாக கமலநாதன் பதவி வகித்த நிலையில் முறையற்ற நிதி கையாளுகை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கொழும்பு சுகாதார அமைச்சு 

மற்றும் வடமாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றிருதது. குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு சுமார் 5 கோடிக்கு அதிகமான வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை போசகராக நியமித்து ஏற்படுத்திய நிர்வாக கட்டமைப்பு தவறான முன்னுதாரணம் என மாகாண உள்ளகக் கணக்காய்வு உறுதி செய்தது. 

இவ்வாறு பயன்படுத்தப்பட்ட நிதி தொடர்பில் மந்திகை வைத்தியசாலையின் கணக்காளருக்கோ யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கணக்காளருக்கோ அல்லது வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் 

அலுவலகக் கணக்காளராரோ வரவு செலவு தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டமை தொடர்பில் பகிரங்கமாக மாகாண உலக கணக்காய்வு வெளிப்படுத்திய நிலையில் 

தொடர்ந்தும் மேல் மட்ட விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு திறந்த விலை மனுக்கோரலின்றி ஒப்பந்தத்தை வழங்கியமை தொடர்பில் மாகாண உள்ளக கணக்காய்வு உறுதிப்படுத்தியது. 

இந்நிலையில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் புதிதாக பதவியேற்ற திலீப் லியனகே பதவியேற்று முதலாவதாக வழங்கப்பட்ட ஊடக அறிக்கையில் யாராவது வைத்தியசாலைகளுக்கு வழங்கும் அன்பளிப்புகள் 

மற்றும் நிதி தொடர்பில் முறையான பற்றுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதுடன் அதனை தமக்கு அனுப்பி உறுதிப்படுத்துமாறு பகிரங்கமாக கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஏற்கனவே வைத்திய அத்தியட்சகராக இருந்த ஒருவரை விசாரணைகளின் பின் இடைநிறுத்தியதாக முன்னாள் வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் எழுத்து மூலம் கடிதம் அனுப்பினார். 

ஆனால் குறித்த மருத்துவருக்கு எதிராக விசாரணை குழு அமைக்கப்படாமை மற்றும் அவரை நீக்கியமைக்கான விசாரணை குழுவின் அறிக்கை இல்லாமல் குறித்த வைத்தியசாலைல் இருந்து நீக்கியமை வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அது தொடர்பில் நீதி மன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான நிலையில் பல சர்ச்சைகளில் சிக்கிய மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக அத்தியாசகர் ஒருவர் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்ட நிலையில் தங்களுடைய வைத்திய சாலையின் வைத்திய அத்தியாச்சகர் பதவி காலியாகவில்லை என தெரிவித்துள்ளது.

ஆகவே குறித்த வைத்தியசாலை தொடர்பில் ஏற்கனவே மாகாண மட்டத்திலும் மத்திய அமைச்சு மட்டும் விசாரணைகள் தேங்கி கிடக்கும் நிலையில் புதியவர் ஒருவரை நியமித்தால் சிலர் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதற்காக தடுக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.