எலிசபெத்தின் இறுதிச்சடங்கு!! -பங்கேற்பதற்காக 2,000க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் உலக தலைவர்கள் படையெடுப்பு: லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு-

ஆசிரியர் - Editor II
எலிசபெத்தின் இறுதிச்சடங்கு!! -பங்கேற்பதற்காக 2,000க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் உலக தலைவர்கள் படையெடுப்பு: லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு-

மறைந்த பிரித்தானிய ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பிரித்தானியாவிற்கு படையெடுத்துள்ளனர்.

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு ஏறக்குறைய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும், அரச குடும்பம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இறுதி சடங்கில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  பிரித்தானிய ராணியின் கணவர் மன்னர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகே நாளை திங்கட்கிழமை 19 ஆம் திகதி ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதன் காரணமாக லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்படும் என்றும், லண்டனுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரித்தானிய எம்.ஐ5 மற்றும் எம்.ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர பொலிஸ் மற்றும் இரகசிய சேவை ஆகியவை இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,ராணியின் இறுதி சடங்கில் சுமார் 7.5 இலட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு