இந்தியாவிற்கு வந்த சிறுத்தைகள்!!

ஆசிரியர் - Editor II
இந்தியாவிற்கு வந்த சிறுத்தைகள்!!

இந்தியாவில் 1948 ஆம் ஆண்டு கடைசி சிறுத்தை இறந்தது. அதன்பின் அங்கு சிறுத்தை இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுத்தை இனத்தை பெருக்கும் நோக்கில் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா வந்தடைந்தன.

நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை. கடைசியாக, சத்தீஸ்கரின் கோரியா பூங்காவில் இருந்த சிறுத்தை, 1948 இல் இறந்தது. இதையடுத்து, 1952 இல் இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் இந்தாண்டு ஜூலை 20 இல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிறுத்தைகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்குகிறது. 

இந்த சிறுத்தைகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்காக, நமீபியா சென்றடைந்த தேசிய விலங்கான புலி வடிவில் டிசைன் செய்யப்பட்ட சிறப்பு விமானம் மூலம் இந்த சிறுத்தைகள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு, இன்று சனிக்கிழமை காலை அந்த வந்தடைந்தது.

அங்கிருந்து உலங்குவானூர்தி வாயிலாக, இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேசத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. பிரதமர் மோடியின் பிறந்த நாளான நாளை குறித்த சிறுத்தைகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு